அஜித்தின் அட்டகாசமான திருப்பு முனை திரைப்படங்கள்

Baahubali 2

அஜித்! இந்த ஒற்றை சொல்லுக்கு மயங்காத சினிமா ரசிகன் இல்லை. திரையுலகை பொறுத்தாரை வலிமையான பின்னணி இருந்தும் ஜெயிக்க முடியாத எத்தனையோ நடிகர்கள் மத்தியில் எந்தவித திரையுலக பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் முன்னேறியவர் அஜித். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கே.பாலசந்தர் என்ற ஒரு குரு, ஒரு வழிகாட்டி இருந்தார். ஆனால் யாருடைய உதவியும் இன்றி, இன்று யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்ததற்கு ஒரே காரணம் அவரது கடுமையான உழைப்பு என்று கூறினால் அது மிகையாகாது.அஜித்துக்கும் மற்ற நடிகர்களை போலவே வெற்றி, தோல்வி மாறி மாறி வந்தது. ஆனாலும் தோல்வியை கண்டு துவளாமல், அதை மனதில் நிறுத்திக்கொள்ளாமல், அலட்டாமல் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிடுவார். அதுதான் அஜித்அஜித் நடித்து வெளியாகிய 56 படங்களில் அவரது சிறந்த சில படங்களை தற்போது பார்ப்போம்

1. ஆசை:

Aasai

'அமராவதி' படத்தில் அறிமுகமானாலும் அஜித் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முக்கிய காரணம் இந்த படம்தான். மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரகாஷ்ராஜூக்கு அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் உள்ள வேடம். எனவே இருவரும் போட்டி போட்டு நடித்த இந்த படம் இருவருக்குமே பெஸ்ட் படமாக அமைந்தது. தேவாவின் மாறுபட்ட இசை மற்றும் பின்னணி, ஜீவாவின் குளிர வைக்கும் கேமிரா ஆகியவை இந்த படத்தின் சிறப்பு. இந்த படத்தில் முதலில் சூர்யாவை அறிமுகம் செய்ய வசந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது சூர்யா நடிப்பில் ஆர்வம் காட்டாததால், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் பரிந்துரையின்படி அஜித்தை ஒப்பந்தம் செய்தார்.

2. காதல் கோட்டை:

Kadhal Kottai

ஒரு காதல் படத்தை கூட விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்த படம் இது. அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியையும், இந்த படத்தின் இயக்குனர் அகத்தியனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்த படம் இது. பார்க்காமலே காதல் என்ற சப்ஜெக்ட் தமிழ் சினிமாவுக்கு புதிய கான்செப்ட் என்பதால் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது.

3. காதல் மன்னன்:

Kadhal Mannan

அஜித்துக்கு பெண்கள் மத்தியில் கிரேஸ் உண்டாக காரணமான படம் தான் இது. இந்த படத்திற்கு பின்னர்தான் கல்லூரி மாணவிகள் மத்தியில் அஜித்துக்கு மதிப்பு கூடியது. தங்களுக்கு இந்த படத்தின் நாயகன் சிவா போன்ற காதலன் வேண்டும் என்று ஒவ்வொரு இளம்பெண்ணையும் ஏங்க வைத்த படம் இது. அஜித்தின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்த உதவிய படங்களில் ஒன்று

4. வாலி:

Vaali

சாக்லேட் பாய் வேடத்தை மட்டுமின்றி வில்லத்தனமான வேடத்தையும் தன்னால் செய்ய முடியும் என்று அஜித் நிரூபித்த படம் இது. எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படமான இந்த படத்தில் அஜித்தின் ஒரு கேரக்டர் வழக்கம் போலவும், இன்னொரு கேரக்டர் வாய்பேச முடியாத வில்லத்தனமாகவும் இருக்கும். அஜித் மற்றும் ஜோதிகாவுக்கு பிலிம்பேர் விருது இந்த படத்தால் கிடைத்தது

5. அமர்க்களம்:

Amarkalam

அஜித்தை முதன்முதலில் ஆக்சன் ஹீரோ பாதைக்கு அழைத்து சென்ற படம் 'அமர்க்களம்'. மேலும் அஜித்-ஷாலினி காதலுக்கு காரணமான படமும் இதுதான். திக்கி திக்கி பேசும் ரெளடி கேரக்டரில் அஜித் பிரம்மாதமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஷாலினி, ரகுவரன் ஆகியோர்களின் நடிப்பும் இருந்ததால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இந்த படம் கடந்த 2014ஆம் ஆண்டு அஜித் பிறந்த நாளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது

6. சிட்டிசன்:

Citizen

தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு முன்பும், பின்பும் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட். இந்திய வரைபடத்தில் ஒரு கிராமமே காணாமல் போய், அந்த கிராமத்தில் இருந்து தப்பித்த ஒரே ஒருவன் ஒரு அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் அழுத்தமான கதை. அஜித் முதன்முதலில் இந்த படத்தில்தான் அதிகபட்ச கெட்டப் மாற்றம் செய்து நடித்தார். ரூ.7 கோடியில் தயாரான இந்த படம் ரூ.25 கோடி வசூல் செய்து அஜித்தின் மறக்க முடியாத வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படம் 'சிட்டிசன்' என்ற பெயரிலேயே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

7. தீனா:

Dheena

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் இதுதான். 'வாலி' படத்தின்போதே எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக இருந்த முருகதாஸ் அஜித்திடம் கூறிய கதை தான் இந்த 'தீனா. ஆக்சன் மற்றும் தங்கை செண்டிமெண்ட் சம அளவில் கலந்த இந்த படம் இன்றும் அஜித் ரசிகர்களால் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று. மேலும் இந்த படத்திற்கு பின்னர்தான் அஜித்துக்கு 'தல' என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

8. முகவரி:

Mughavri

அஜித்தால் மனதை உருக்கும் அளவிற்கும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் இது. இசையமைப்பாளராக வேண்டும் என்று அஜித் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைய கடைசியில் குடும்பத்திற்காக தனது இசையமைப்பாளர் ஆசையை குழிதோண்டி புதைத்துவிட்டு சாதாரண வேலைக்கு செல்லும் ஒரு கேரக்டர். இந்த படத்தில் அஜித் மட்டுமின்றி ஜோதிகா, ரகுவரனின் நடிப்பும் மெச்சும்படி இருந்தது. இந்த படம் கமர்சியலாக வெற்றி பெறவில்லை எனினும் அஜித்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்களை சம்பாதித்து கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

9. பூவெல்லாம் உன் வாசம்:

poovellaiunvaasam

பூவெல்லாம் உன் வாசம்: தீனா, சிட்டிசன் ஆகிய இரண்டு ஆக்சன் வெற்றி படங்களை அடுத்து மீண்டும் குடும்ப செண்டிமெண்ட், மெல்லிய காதல், அந்த காதலில் ஒருசிறு மோதல் என்ற கதையில் அஜித் நடித்த இந்த படமும் அவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மதிப்பை உயர்த்தியது. எழில் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், நாகேஷ், வி.எஸ் ராகவன், சாயாஜி ஷிண்டே போன்ற முத்த கலைஞர்கள் தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உதவினர்.

10. வில்லன்:

poovellaiunvaasam

'வாலி' படத்திற்கு பின்னர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம். அனுபவ இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் சிறந்த திரைக்கதை, இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித் பஸ் கண்டக்டர் கேரக்டரிலும், மாற்றுத்திறனாளி கேரக்டரிலும் நடித்திருப்பார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கேர்கடரில் டாக்டர் ராஜசேகர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

11. வரலாறு:

Varalaru

வில்லன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் அஜித்-கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் உருவான இந்த படத்தில் அஜித் முதன்முதலில் மூன்று வேடங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக பெண்மை கலந்த பரதநாட்டிய கலைஞர் வேடம் அவருக்கு சவாலான வேடமாக இருந்தது. இந்த வேடத்தில் நடிக்கும்போது பலர் கேலி செய்த நிலையில் தனது அசத்தலான நடிப்பால் கேலி செய்தவர்களின் வாயை அடைத்தர் அஜித். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம் தந்ததால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

12.பில்லா:

Billa 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே இந்த படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று அஜித் மீது வைத்த அபாரமான நம்பிக்கையில் பரிந்துரை செய்த படம். அந்த நம்பிக்கையை அஜித் காப்பாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக ஒரு தமிழ் சினிமா ஸ்டைலிஷாக, பிரமாண்டமாக தயாரான படம். அஜித்தை ஒரு மாஸ் நடிகர் லெவலுக்கு கொண்டு சென்ற படம் என்று கூறினாலும் மிகையாகாது. அஜித்தின் ஸ்டைலிஷான லுக், நயன்தாரா, நமீதாவின் கவர்ச்சி, மலேசிய லொகேஷன், விஷ்ணுவர்தன் இயக்கம், யுவனின் பின்னணி இசை உள்பட அனைத்தும் சிறப்பாக அமைந்த படமாக இருந்ததால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

13.மங்காத்தா:

Mangatha

அஜித்துக்கு நெகட்டிவ் கேரக்டர் என்றால் அல்வா சாப்பிடுவது போல் என்றிருக்கும் நிலையில் அஜித்தின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த இன்னொரு படம் 'மங்காத்தா'. வெங்கட்பிரபுவின் விறுவிறுப்பான இயக்கத்தில் அஜித், அர்ஜூன் இருவரும் போட்டி போட்டு நடித்த படம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்திற்கு பின்னர் இரண்டாவது பெரிய வசூலை பெற்ற படமாக அமைந்தது மங்காத்தா. இன்றளவும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பினால் டி.ஆர்.பியை எகிற வைக்கும் ஒரு படம் என்றால் அது மங்காத்தா தான்

14.என்னை அறிந்தால்:

Yennai Arindhaal

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த வித்தியாசமான படம் இது. போலீஸ் கேரக்டருன் காதல், தந்தை பாசம் என பல்வேறு வகை நடிப்பை வெளிப்படுத்த அஜித்துக்கு கிடைத்த ஒரு வாய்ப்புதான் இந்த படம். குறிப்பாக அருண்விஜய்க்கு பிரேக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

15.வேதாளம்:

Vedhalam

வீரம் படத்திற்கு பின்னர் அஜித்துடன் இயக்குனர் சிவா மீண்டும் இணைந்த படம் இது. இரண்டு வகையான கெட்டப்புகளில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். அனிருத்தின் இசையில் உருவான 'ஆலுமா டோலுமா' பாடல் உலகப்புகழ் பெற்றது. ரூ.61 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்து அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களின் பட்டியலில் இணைந்த படம்தான் 'வேதாளம்


அஜித்தின் அட்டகாசமான திருப்பு முனை திரைப்படங்கள்