close
Choose your channels

அம்மா - மகளா? அக்கா - தங்கையா? மகளுடன் இருக்கும் ஷாலின் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Monday, January 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அஜித் மனைவி மற்றும் அஜித் மகள் ஆகிய இருவரும் அக்கா தங்கைகள் இளமையாக இருப்பதாக கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித் நடித்த ’துணிவு’ வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ஏகே 62’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில் அஜீத் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்வியா, மகள் அனோஷ்கா ஆகியோருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை ஷாலினி அஜித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களில் ஷாலினியும் அவரது மகள் அனோஷ்காவும் இருக்கும் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஷாலினி, அனோஷ்கா ஆகிய இருவரையும் பார்க்கும்போது அம்மா மகள் போல் தெரியவில்லை என்றும் அக்கா தங்கை போல் தெரிகிறது என்றும் பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அஜித் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித் குடும்பத்துடன் இருக்கும் இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.