அஜித்தின் நேர் கொண்ட பார்வை: டைட்டில் குறித்து ஒரு பார்வை

  • IndiaGlitz, [Tuesday,March 05 2019]

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில், முன் அறிவிப்பு இன்றி திடீரென நேற்று இரவு வெளியானது. நேர் கொண்ட பார்வை ' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில்.

தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு இல்லாததால், இஷ்டத்துக்கு தலைப்பு வைக்கிற காலகட்டத்தில், மகாகவி பாரதியின் வைர வரியை அஜீத் படத் தலைப்பாக்கி இருப்பது படக்குழுவினர்களின் சிறப்பாக கருதப்படுகிறது. இது ஒரு கம்பீரமான தமிழ்த் தலைப்பு என்பதில் பெருமைதான்.

அரசியல், போலீஸ் பின்புலம் உள்ள ஒருவர் மூன்று பெண்களுக்கு தரும் தொல்லைகளும், அதில் இருந்து அந்த பெண்கள் விடுபட ஒரு வக்கீல் எடுக்கும் முயற்சிதான் இந்த படத்தின் கதை. இதில் வக்கீல் கேரக்ட்டரில் தான் அஜித் நடித்து வருகிறார்.

அஜீத்-வினோத் கூட்டணியின் தனித்துவம் எப்படி இருக்கும் என்பதற்கு படத்தின் தலைப்பே சிறந்த உதாரணம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More News

மக்கள் செல்வியாக மாறும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சீனு ராமசாமி 'மக்கள் செல்வன் என்ற பட்டத்தை 'தர்மதுரை  என்ற படத்தில் நடித்தபோது கொடுத்தார் என்பது தெரிந்ததே.

'தல 59' படத்தின் அட்டகாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

தல அஜித் நடிக்கும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

ஜிவி பிரகாஷ்-ரைசா வில்சன் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்

விஜயகாந்தை சந்தித்த ஓபிஎஸ்: கூட்டணி இறுதியாகின்றதா?

கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக என மாறி மாறி இரண்டு கூட்டணியிலும் தேமுதிக பேரம் பேசி வந்தது. இரண்டு மாறுபட்ட கொள்கையுடைய

வேண்டும் என்றேதான் செய்தேன்: கார்த்தி செல்பி பிரச்சனை குறித்து கஸ்தூரி 

செல்பி எடுக்கும்போது சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி கேட்டு எடுக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட பலருக்கு இல்லை என்று ஆதங்கமாக கூறினார்.