close
Choose your channels

மக்கள் செல்வியாக மாறும் பிரபல நடிகை!

Tuesday, March 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சீனு ராமசாமி 'மக்கள் செல்வன் என்ற பட்டத்தை 'தர்மதுரை என்ற படத்தில் நடித்தபோது கொடுத்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு ஒரு இயக்குனர் 'மக்கள் செல்வி என்று பட்டத்தை கொடுக்கவுள்ளார்.

வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் 'டேனி '. இந்த படத்தை இயக்குனர் சற்குணம் உதவியாளர் சாந்தமூர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் வரலட்சுமி, ஒரு கொலைக்கு காரணமான மூன்று நபர்களை கண்டுபிடிப்பதுதான் கதை. வரலட்சுமி உதவியாக இந்த படத்தில் டேனி என்ற ஒரு நாய் நடித்துள்ளது.

இந்த படத்தில் வரலட்சுமி நடிக்கும்போது அவரை பல பெண்கள் பார்த்து உதவி கேட்டதாகவும், 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வரும் வரலட்சுமி, தன்னை தேடி வரும் பெண்களுக்கு பல உதவிகள் செய்ததாகவும் கூறிய படக்குழுவினர் வரலட்சுமிக்கு 'மக்கள் செல்வி என்ற பட்டத்தை கொடுக்க முடிவு செய்ததாகவும், ஈந்த படத்தின் டைட்டிலில் வரலட்சுமிக்கு முன் 'மக்கள் செல்வி' என்ற டைட்டில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.