close
Choose your channels

'துணிவு' சக்சஸ் மீட்.. அஜித் வரமாட்டார் தெரியும், இவரையும் காணுமே..!

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது என்பதும், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக இந்த படம் நல்ல வசூலை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள், வாடிக்கையாளர்களின் பணம் வங்கிகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இந்த படம் உள்ளது என்பது தான் பெரும்பாலான விமர்சனமாக இருப்பதால் ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ’துணிவு’ திரைப்படம் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து வரும் நிலையில் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று கொண்டாடினர். இந்த சக்சஸ் மீட்டில் இயக்குனர் எச் வினோத், தர்ஷன், ஜிஎம் குமார் உள்பட இந்த படத்தில் பணிபுரிந்த பலரும் இருக்கும் வெற்றி விழாவின் குரூப் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

புரோமோஷன் விழாக்கள், வெற்றி விழாக்கள் உள்பட எதிலும் அஜித் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த சக்சஸ் மீட்டில் மஞ்சுவாரியார் கலந்து கொண்டு இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த குரூப் புகைப்படத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.