close
Choose your channels

அஜித்துடன் முதன்முதலில் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்: மாஸ் தகவல்!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் ஒரு ஒரு தயாரிப்பாளருக்கு படம் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தால் அதே தயாரிப்பாளருக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் தொடர்ச்சியாக தருவார் என்பது கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போனிகபூர் அஜித்தின் மூன்று படங்களை தொடர்ச்சியாக தயாரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய், சூர்யா சிம்பு, தனுஷ், உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது .

அஜித்-லைக்கா முதன் முதலாக இணையும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் அல்லது விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.