செல்பி எடுத்த நபரின் போனை பிடுங்கிய அஜித்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தல அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் 6.30 மணிக்கே திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய உடன் தனது வாக்கை பதிவு செய்ய முயன்றபோது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறியும் தொடர்ந்து ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்ததால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அஜித் கோபமாகி செல்பி எடுத்த ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்ட காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. அஜித் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்திருக்கும் நிலையிலும் அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அஜித் தனது வாக்கை பதிவு செய்யும் போதும் வாக்களித்த பின்னரும் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்த காவல்துறையினர் அவர் வாக்களித்த பின்னர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித், சூர்யா வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

'குக் வித் கோமாளி' வின்னர் யார்? ரன்னர்கள் யார் யார்?

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு....! திருச்சி மேற்கில் ரத்தாகிறதா தேர்தல்...?

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் திமுக கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா? நீ யாருன்னு காட்டு: பிரபல தமிழ் நடிகையின் வீடியோ வைரல்!

அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா?, ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு' என தமிழ் நடிகை ஒருவர் வீடியோவில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா இணைந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கம்போஸ் செய்த பாடலின் ரிலீஸ் தேதியை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் இசை ரசிகர்கள் மகிழ்ச்சியின்