close
Choose your channels

ஒரே மாதத்தில் மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படம் ரிலீஸ்!

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியானது என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்தோம். மேலும் இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற’ துணிவு’ மற்றும் ’வாரிசு’ திரைப்படங்கள் அடுத்தகட்டமாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் டிவியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் அதே தேதியில் அஜித்தின் 'துணிவு’ திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஓடிடியிலும் ஒரே நாளில் வெளியாக இருப்பது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos