அஜித்தின் விவேகம்: சென்னையில் சாதனை செய்த முதல் நாள் வசூல்

  • IndiaGlitz, [Friday,August 25 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. சென்னையில் ஒருசில திரையரங்குகளில் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்ட போதிலும் பெரும்பாலான திரையரங்குகளில் காலை 7 மணிக்கே முதல் காட்சி தொடங்கியது.

'விவேகம்' படத்திற்கு ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் கலவையான விமர்சனத்தை அளித்த நிலையிலும் இந்த படம் முதல் நாள் வசூலில் சாதனை செய்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் முதல் நாளில் ரூ.1,20,78,497 வசூல் செய்துள்ளது. சென்னையில் இதுதான் முதல்நாள் அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை போலவே பல நகரங்களில் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

'மெர்சல்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'மெர்சல்' படத்தை தயாரித்து வரும் தேனாண்டாள் நிறுவனம், அடுத்த பட அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது...

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது....

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிர்ச்சியை கொடுத்த புளுவேல் கேம்

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டால் இந்தியா உள்பட பலநாடுகளில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கமல் பாராட்டு

ஆதார் அட்டை குறித்த வழக்கு ஒன்றின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்புக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்...

அப்பா வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகரா அஜித்? பாலிவுட் நடிகரின் சர்ச்சை டுவீட்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்...