close
Choose your channels

'மெர்சல்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு

Thursday, August 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'மெர்சல்' படத்தை தயாரித்து வரும் தேனாண்டாள் நிறுவனம், அடுத்த பட அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தின் ஹீரோ சந்தானம். இந்த படத்தை இயக்குபவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் ராஜேஷ். ராஜேஷின் முந்தைய படங்களில் ஹீரோவுக்கு இணையாக காமெடி கேரக்டர்களில் நடித்த சந்தானம் தற்போது அவருடைய படத்தின் ஹீரோ ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளதோடு, இந்த படத்தின் கூடுதல் விபரங்களை மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சந்தானத்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி என்றும், 'மெர்சல்' தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை அடைவதாகவும் இயக்குனர் ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.