தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை ஷாலினி அஜித் பார்த்தாரா?

  • IndiaGlitz, [Sunday,April 17 2022]

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற போதிலும் திருப்திகரமான வசூல் இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர்,

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தைப் பார்த்ததாகவும் தகவல் வெளியானது,

இந்த நிலையில் தளபதி விஜய் படம் எப்போது வெளியானாலும் தவறாமல் பார்க்கும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித், ‘பீஸ்ட்’ படத்தையும் தனது மகள் அனோஷ்காவுடன் சேர்ந்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் ஷாலினிஅஜீத் மற்றும் அனோஷ்கா ‘பீஸ்ட்’ படம் பார்த்ததாக கூறப்படுகிறது ,

விஜய்யுடன் ’காதலுக்கு மரியாதை’ மற்றும் ‘கண்ணுக்குள் நிலவு’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஷாலினிஅஜித், விஜய்யின் தீவிர ரசிகை என்பதும், அவர் மட்டுமின்றி அவரது தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் விஜய்யின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகட்டிவான கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் அஜித் மனைவி ஷாலினிஅஜித் ‘பீஸ்ட்’ படத்தை பார்த்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

More News

சன் டிவி தொகுப்பாளினிக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை எந்த நடிகர் தெரியுமா?

சன் டிவி தொகுப்பாளினிக்கும்,  தமிழ் திரையுலக நடிகருக்கும்  திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அம்பேத்கார்-மோடி ஒப்பீடு செய்த இளையராஜா குறித்து ஆளுனர் கருத்து!

சமீபத்தில் பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்காரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினர்

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: தமிழ் நடிகைகள் கருத்து!

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து தமிழ் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

சியான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் மாஸ் அறிவிப்பு!

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி': மாஸ் அறிவிப்பை வெளியிட்டார் போனிகபூர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது