close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை ஷாலினி அஜித் பார்த்தாரா?

Sunday, April 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற போதிலும் திருப்திகரமான வசூல் இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர்,

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தைப் பார்த்ததாகவும் தகவல் வெளியானது,

இந்த நிலையில் தளபதி விஜய் படம் எப்போது வெளியானாலும் தவறாமல் பார்க்கும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித், ‘பீஸ்ட்’ படத்தையும் தனது மகள் அனோஷ்காவுடன் சேர்ந்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் ஷாலினிஅஜீத் மற்றும் அனோஷ்கா ‘பீஸ்ட்’ படம் பார்த்ததாக கூறப்படுகிறது ,

விஜய்யுடன் ’காதலுக்கு மரியாதை’ மற்றும் ‘கண்ணுக்குள் நிலவு’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஷாலினிஅஜித், விஜய்யின் தீவிர ரசிகை என்பதும், அவர் மட்டுமின்றி அவரது தங்கை ஷாமிலி, சகோதரர் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் விஜய்யின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகட்டிவான கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் அஜித் மனைவி ஷாலினிஅஜித் ‘பீஸ்ட்’ படத்தை பார்த்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.