close
Choose your channels

அசீமுக்கு ரெட்கார்ட்? கமல் முன் கொந்தளித்த ஒட்டுமொத்த போட்டியாளர்கள்!

Saturday, October 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீமுக்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கமல் முன் ரெட் கார்டு கொடுக்கும் நிகழ்வின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அசீம். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டிடியூட் காட்டி வருவதாக பார்வையாளர்களும் போட்டியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் ஆயிஷாவுடன் ஏற்பட்ட மோதலில் ’வாடி போடி’ என அசீம் அநாகரிகமாக பேசியது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. அப்படி பேசியது தவறு என சுட்டிக்காட்டிய விக்ரமனையும் ’வாடா போடா’ என பேசியது அநாகரீகத்தின் உச்சமாக கருதப்பட்டது.

இதனையடுத்து அசீமை வெளியேற்ற வேண்டும் என்றும் இந்த போட்டிக்கு அவர் தகுதி இல்லாதவர் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்தனர். பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த வீட்டில் உள்ள ஒருவருக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியானவர் யார் என்று கேள்வி கேட்கிறார். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கிறது, அந்த கண்ணியத்தை அவருக்கு தரவேண்டும் என்பதற்காக இந்த ரெட் கார்டை கொடுக்கிறேன் என்று விக்ரமன் கூறினார்.

அதேபோல் ‘அசீம் ரொம்ப டாமினேட் செய்கிறார் அவருடைய வாய்ஸ் ரொம்ப சத்தமாக இருக்கிறது என்று ரக்சிதா கூறுகிறார். அசீம் வேண்டுமென்ற செய்கிறாரோ என்று எனக்கு சந்தேகம் இருப்பதாக மகேஸ்வரி கூறுகிறார். ரொம்பவும் அநாகரிகமாக செயல்பட்டதாக அசீமுக்கு கொடுக்கிறேன் என கதிரவன் கூறுகிறார். பெண்களை கொச்சைப்படுத்தி அசிங்கமாக நடந்து கொண்ட அசீமுக்கு ரெட்கார்டு கொடுப்பதாக ஆயிஷா கூறுகிறார்.

எனவே ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசீமுக்கு ரெட் கார்ட் கொடுத்து உள்ளதை அடுத்து கமல் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை சில மணி நேரங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.