close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறிவிட்டாரா? என்ன நடந்தது?

Saturday, October 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பான போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து திடீரென வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் முதல் நாள் முதலே சக போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் ஜிபி முத்து தனது அப்பாவியான காமெடியால் கவர்ந்தார். கமல்ஹாசனே அவரை கிண்டல் செய்த போதிலும் கூட அதையும் புரிந்து கொள்ளாமல் அப்பாவித்தனமாக ஜிபி முத்து தனது முகத்தை வைத்திருந்தது பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது. 

அதேபோல் முதல் ஒரு வாரத்தில் அவர் சூப்பராக பெர்ஃபாம் செய்ததை அடுத்து கண்டிப்பாக அவர் 100 நாள் இந்த வீட்டில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவருக்கு குழந்தைகள் நினைப்பு வந்து விட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு போக வேண்டும் என பிக்பாஸ் இடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் எவ்வளவோ அவருக்கு சமாதானம் கூறியும் அதை ஏற்காமல் அவர் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஜிபி முத்துவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சற்று முன் வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த சில நிமிடங்களுக்கு முன் வெளியான புரமோ வீடியோவில் கூட ஜிபி முத்து உட்கார்ந்து இருக்கும் நிலையில் சற்று முன் அவர் வெளியேறியதாக கூறப்படுவது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.