close
Choose your channels

7 மாத கர்ப்பிணி செய்யும் காரியமா இது? நடிகை அமலாபால் வீடியோ வைரல்..!

Friday, March 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலா பால் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் வீடியோவுக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்களும் இன்னொரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகில் அஜித், விஜய் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை அமலாபால், கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சற்றுமுன் அவர் கிளப் ஒன்றில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக ஏழாவது மாதத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் என்று தெரிவித்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பலர் வாழ்த்துக்களும் சிலர் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.



7 மாத கர்ப்பிணி செய்யும் காரியமா இது? என்று ஒரு சிலர் கமெண்ட் செய்தாலும் அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தை நன்றாக என்ஜாய் செய்யும் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.