close
Choose your channels

மயில் ஒரு பக்கம், மாடுகள் ஒரு பக்கம்.. இடையில் அமலாபால் செய்யும் வேலையை பாருங்கள்..!

Sunday, February 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மயில்கள் மற்றும் மாடுகள் இருக்கும் இடத்தில் அமலாபால் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அமலாபால் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாட கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு கணவருடன் சென்ற அமலாபால் அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்து சில புகைப் படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த அவையில் சற்றுமுன் அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அமலாபாலின் கணவர் மயிலுக்கு உணவு போடும் காட்சியும், சுற்றி மாடுகள் திரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் நடுவே அமலாபால் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் காட்சியும் உள்ளது.

ஒரு பக்கம் கணவர் மயிலுடன் இருக்கும் வீடியோவையும் இன்னொரு பக்கம் மாடுகளுக்கு இடையே அமலாபால் தியானம் செய்யும் புகைப்படம் , வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கர்ப்பமான நேரத்தில் அமலா பால் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிகவும் அமைதியாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.