close
Choose your channels

திடீரென சிவகார்த்திகேயனை வாழ்த்திய அமீர்கான்.. காரணம் இதுதானா?

Monday, May 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென சிவகார்த்திகேயன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’அயலான்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ’அயலான்’ திரைப்படம் தீபாவளி திருநாள் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திடீரென ’அயலான்’ படத்திற்கு அமீர்கான் புரடொக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரித்த போது சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படத்தை ஹிந்தியில் ரிலீஸ் செய்ய அமீர்கான் புரொடக்ஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக புரமோஷன் செய்யும் வகையில் தங்களது சமூக வலைதளத்தில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ’அயலான்’ படத்தை பாலிவுட்டில் அமீர்கான் ரிலீஸ் செய்தால் மிகப்பெரிய அளவில் இந்த படம் ரசிகர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment