close
Choose your channels

இந்தியா-இங்கிலாந்து போட்டியின்போது முக்கிய அறிவிப்பை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்: என்னவாக இருக்கும்?

Wednesday, November 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கும் நிலையில் இந்த போட்டியின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இன்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 2007ஆம் ஆண்டு பிறகு மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து போட்டியின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment