close
Choose your channels

சுந்தர் சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகை!

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2’ ஆகிய படங்களை அடுத்து ’அரண்மனை 3’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையிலும் ’அரண்மனை 3’ படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது/

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது மட்டுமின்றி ’அரண்மனை’ முதல் பாகத்திலும் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களில் நடித்திருந்த லட்சுமிராய், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா ஆகியோர்களும் ’அரண்மனை 3’ படத்தில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.