ஜாக்கிசான் குழந்தை மனம் படைத்தவர். தனுஷ் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,February 10 2016]

தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அமைரா, தற்போது ஜாக்கிசான் நடித்து வரும் 'குங்பூ யோகா' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜாக்கிசானுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அமைரா கூறியுள்ளார்.

ஜாக்கிசான் ஒரு குழந்தை போல படப்பிடிப்பில் இருப்பார். நான் நடிக்கும் காட்சிகளை கூர்ந்து கவனித்து எனது நடிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவார். ஜாக்கிசானின் மற்ற படங்களைபோலவே இந்த படத்திலும் ஆக்சனும் காமெடியும் சம அளவில் கலந்து இருக்கும்.

இந்த படத்திற்காக அதிகமாக ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இன்னும் எனது வலது கையில் இருக்கின்றன. Mr. X படத்தில் நான் நடித்த ஆக்சன் காட்சிகள்தான் எனக்கு ஜாக்கிசானுடன் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

More News

'தெறி' விஜய்க்காக மெலடி பாடலை பாடிய பிரபல பாடகர்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை உலுக்கிய நிலையில் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ளது...

'புலி' இசை வெளியீட்டு விழாவினால் மன உளைச்சலுக்கு ஆளானேன். டி.ராஜேந்தர்

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடித்த புலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே...

'விஜய் 60' படத்தின் ஹீரோயின்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி என கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

சிவாஜி, கமல் சாதனையை முறியடித்த பாபிசிம்ஹா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்து தேசியவிருது பெற்ற பாபிசிம்ஹா, தற்போது அரைடஜன் படங்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்....

விசாரணை பட நடிகரிடம் போலீஸ் விசாரணை

சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் 'விசாரணை' உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...