close
Choose your channels

சிவாஜி, கமல் சாதனையை முறியடித்த பாபிசிம்ஹா?

Wednesday, February 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்து தேசியவிருது பெற்ற பாபிசிம்ஹா, தற்போது அரைடஜன் படங்களுக்கும் மேல் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'வல்லவனுக்கு வல்லவன்'

விஜய் தேசிங்கு இயக்கி வரும் இந்த படத்தில் பாபிசிம்ஹா 14 வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறாராம். 'நவராத்திரி' என்ற படத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது தோற்றங்களிலும், 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் பத்து தோற்றங்கலிலும் நடித்த நிலையில் தற்போது பாபிசிம்ஹா 14 தோற்றங்களில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருக்கூத்து நடிகராக பாபிசிம்ஹா நடிப்பதாகவும், அவர் போட்டும் ஒவ்வொரு தெருக்கூத்திலும் ஒவ்வொரு தோற்றத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கருணாகரன் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதாகவும், அவரும் இந்த படத்தில் 11 தோற்றங்களில் நடித்து வருவதாகவும் இயக்குனர் தேசிங்கு கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.