close
Choose your channels

லோகேஷ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், உங்களுக்கு என்ன? அசத்தும் பதில் கூறிய அனிருத்

Wednesday, June 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடியை தாண்டி வசூல் மழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்த கமலஹாசன், ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ’விக்ரம்’ படத்தின் மலையாள வெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்து கொண்டனர். அப்போது நிருபர் ஒருவர் ’லோகேஷ்க்குக் கார் பரிசாக கொடுத்த கமல்ஹாசன், சூர்யாவுக்கு வாட்ச் பரிசாக கொடுத்த கமல்ஹாசன் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று அனிருத்திடம் கேட்டார்.

இதற்கு அனிருத், ’விக்ரம்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கொடுத்துள்ளார் என்றும் அதுவே மிகப்பெரிய பரிசு என்று அசத்தலான பதிலை கூறினார். ’விக்ரம்’ படத்தில் அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ’பத்தல பத்தல’ பாடல், இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.