close
Choose your channels

அனுஷ்கா ஷெட்டியின் 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ ‘பாகுபலி 2’ ஆகிய சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் நடித்து உலக அளவில் புகழ் பெற்றவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மாதவனுடன் ’சைலன்ஸ்’ என்ற திரைப்படத்தை நடித்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமையல் கலை வல்லுநராக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள இந்த படம் ராதான் இசையில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் அனுஷ்காவின் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.