5 மொழிகளில் அர்ஜூன் ரெட்டி இயக்குனரின் அடுத்த படம்.. டைட்டில்& ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Sunday,January 01 2023]

விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்பவர் இயக்கி இருந்தார் என்பதும் 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 50 கோடி வசூல் செய்தது. இதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ’கபீர் சிங்’ என்ற இந்தி படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். இந்த படம் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகி சுமார் 400 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’அனிமல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உலகம் முழுவதும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

More News

19 வருடம் கழித்து இரண்டாம் பாகம். செல்வராகவன் படத்தின் தயாரிப்பாளர் தகவல்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் ஒன்று 19 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாக

இந்தியில் ரீமேக் ஆகும் 'லவ் டுடே': நாயகன் இவர் தான்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும்

பிக்பாஸ் ஜனனியின் தங்கையா இவர்? க்யூட் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் 80 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில்

ஆர்ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்': ரிலீஸ் குறித்த அறிவிப்பு

'ரன் பேபி ரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஓடிடிக்கு வருகிறதா 'தி லெஜெண்ட்': தொழிலதிபர் சரவணன் டுவிட்!

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை