close
Choose your channels

இந்தியில் ரீமேக் ஆகும் 'லவ் டுடே': நாயகன் இவர் தான்!

Sunday, January 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 7 கோடி பட்ஜெட்டில் உருவாகி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ’துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியிலும் இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குவாரா என்பது குறித்த முடிவு இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும்.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு மொழியில் மாபெரும் வெற்றிபெற்ற ’லவ் டுடே’ திரைப்படம் இந்தியிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.