close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்': ரிலீஸ் குறித்த அறிவிப்பு

Sunday, January 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோ வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’எல்கேஜி’ ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’வீட்ல விசேஷம்’ ஆகிய படங்கள் நல்ல வசூலை தந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’ரன் பேபி ரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட ’ரன் பேபி ரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவித்துள்ளது. சரியான ரிலீஸ் செய்து இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

ஆர்ஜே பாலாஜி ஜோடியாக முதன் முதலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.