close
Choose your channels

நேர்ல போய் கத்தி இருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது: தோனி என்ட்ரி குறித்து அருண்ராஜா காமராஜ்..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் தல தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது பின்னணியில் ஒலித்த பாடல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகர் அருண் ராஜா காமராஜ் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டியில் தல தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது பின்னணியில் ’கபாலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நெருப்புடா.. நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்’ என்ற பாடல் ஒலித்தது. இந்த இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அருண் ராஜா காமராஜ் கூறியிருப்பதாவது:

நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னனி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனி ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய வரும்போது ரஜினி பாடல்கள் தான் பெரும்பாலும் இசைக்கப்பட்டு வருகிறது என்பதும் பாட்ஷா, அண்ணாமலை, படையப்பா போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இதற்கு முன்பு இசைக்கப்பட்ட நிலையில் தற்போது ’கபாலி’ படத்தின் பாடல் இசைக்கப்பட்டது என்பதும் அதை மைதானத்தில் இருந்தா ஒட்டுமொத்த ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment