close
Choose your channels

ஆரம்பமானது ஹரி-அருண்விஜய் திரைப்படம்: பூஜை புகைப்படங்கள் வைரல்!

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் ஹரியின் அடுத்த திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் 33வது திரைப்படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இவர்களுடன் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அருண் விஜய், ஹரி, பிரியா பவானி சங்கர், விஜயகுமார், ஹரியின் மனைவி ப்ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz