தயவுசெய்து இதுமாதிரி யாரும் செய்யாதீங்க: காயமடைந்த பிரபல நடிகரின் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,May 16 2020]

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு, 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ படம் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு ’குற்றம் 23’ ’செக்க சிவந்த வானம்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்கள் வெளியாகி தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்

இந்த நிலையில் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் உடற்பயிற்சி மெஷின் ஒன்றில் ரிஸ்க்கான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுகிறார். இந்த விபத்தில் அவருடைய முழங்கால் இரண்டிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது தயவுசெய்து இதுமாதிரி பயிற்சியாளர் இல்லாமல் யாரும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். கடந்த வாரம் நான் உடற்பயிற்சியின்போது கீழே விழுந்ததில் எனது இரண்டு முழங்கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக கடவுளின் கிருபையால் தலையில் அடிபடாமல் இருந்தது. எனவே யாரும் இது மாதிரி பயிற்சியாளர் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அருண்விஜய் பதிவு செய்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அருண்விஜய் நடித்த ‘மாஃபியா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் தற்போது அவர் ’அக்னி சிறகுகள்’, பாக்ஸர்’ ‘சினம்’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு: தட்டிக்கேட்ட அத்தையை கொலை செய்த சென்னை வாலிபர்

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த சென்னை வாலிபர் ஒருவரை அவருடைய அத்தை தட்டிக் கேட்டதை அடுத்து, அத்தையை அந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஓடும் ரயிலில் 167 பயணிகள் திடீர் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி

மூன்றாம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

கொரோனா தடுப்பு மையமாக மாறும் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம்!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிகவும் முக்கியமான ஸ்டேடியம் மும்பை வான்கடே ஸ்டேடியம் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகள்

மாஸ்க் அணிந்து உடற்பயிற்சி செய்த வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாஸ்க் அணிவது என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் கட்டாயமாக உள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.