அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' இடித்து தரைமட்டம்?

  • IndiaGlitz, [Monday,October 05 2015]

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள டிமாண்டி காலனியில் தற்போதும் பேய் நடமாட்டம் இருந்து வருவதாக வதந்திகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வதந்தியை அடிப்படையாக கொண்டுதான் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலனியில் இதற்கு முன்னர் வசித்தவர்கள் மற்றும் ஒருசில ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 186 கிரவுண்ட் அளவு கொண்ட இந்த டிமாண்டி காலனியை கைப்பற்ற திட்டம்போட்டே இந்த வதந்தியை பரப்பியதாக கூறப்படுவதுண்டு

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று டிமான்டி காலனியை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இந்த இடத்தை நிர்வகித்து வரும் சென்னை-மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், "சுமார் 186 கிரவுண்ட் நிலம் கொண்ட டிமான்டி காலனி, ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றை தீர்த்து முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினர்.

டிமாண்டி காலனி' திரைப்படம் வெளிவந்த நேரத்தில் பலர் இந்த காலனிக்கு வந்து பேய் பங்களாவை பார்த்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'புலி' படக்குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நடித்த 'புலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும்...

அஜீத்தின் 'வேதாளம்' தீபாவளிக்கு வருவது சாத்தியமா?

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அறிவிக்கப்பட்டிருந்தது.....

தனுஷ்-பிரபுசாலமன் படத்தில் வில்லன்?

'மாரி' படத்தை அடுத்து தனுஷ் நடித்து வரும் 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.....

விறுவிறுப்பாக நடைபெறும் 'விஜய் 59' படப்பிடிப்பு

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது......

'விஜய் 60' படத்தின் நாயகி மற்றும் இயக்குனர் யார்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் நிலையில் அட்லி இயக்கத்தில்...