close
Choose your channels

'புலி' படக்குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

Monday, October 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நடித்த 'புலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும் கோலிவுட் திரையுலகின் முக்கியமானவர்கள் இந்த படத்தை பாராட்டி வருவதோடு, விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி, மற்றும் நடிகர் ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் 'புலி' படத்தை பாராட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் 'புலி' படத்தை பாராட்டியதாக கூறப்படுகிறது.

'புலி' படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, படத்தயாரிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். படக்குழுவினர்களின் கடுமையான உழைப்பால் 'புலி' படம் சிறப்பாக வந்துள்ளதாக ரஜினி கூறியதாக, எஸ்.கே.டி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஒருசில ஊடகங்கள் 'புலி' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அளித்த நிலையில் ரஜினியின் பாராட்டு படக்குழுவினர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.