close
Choose your channels

முடிவுக்கு வந்தது ஆர்யாவின் அடுத்த படம்!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு 'கஜினிகாந்த்' வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு அவர் சூர்யாவின் 'காப்பான்' உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இவ்வாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்யா நடித்து வந்த 'மகாமுனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் எடுத்து கொண்ட குரூப் போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாந்தகுமார் இயக்கியுள்ளார். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவில் சபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.