விஜய்சேதுபதியை அடுத்து ஆர்யா: ஒரே நாளில் ரிலீஸாகும் இரண்டு படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாகவிருக்கும் நிலையில், ஆர்யா நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் நாளை அவர் நடித்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. அடுத்தடுத்த நாளில் விஜய் சேதுபதியின் திரைப் படங்கள் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.

இந்த நிலையில் இதேபோல் ஆர்யாவின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விஷாலுடன் ஆர்யா நடித்த ’எனிமி’ திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை திருநாளின் போது வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’அரண்மனை 3’ திரைப்படம் அதே தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் மற்றும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தமிழ் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் ஒரு சில இடங்களில் நாளை முதல் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக

தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளைஞர்? பதிலுக்கு போலீஸ் கொடுத்த வெகுமதி!

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரை சாலையில் ஓட்டாமல் தண்டவாளத்தில் ஓட்டி அல்ட்ராசிட்டி காட்டியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த': நாளை இரட்டை விருந்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

தீபாவளி ரிலீஸை உறுதி செய்த 'வலிமை' பட நடிகை!

தல அஜித் நடித்த 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது என்பதும் இந்த படத்தின் நிறைவு விழா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்று வைரலாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனா காரணமாக யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது.