close
Choose your channels

விஜய்சேதுபதியை அடுத்து ஆர்யா: ஒரே நாளில் ரிலீஸாகும் இரண்டு படங்கள்!

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாகவிருக்கும் நிலையில், ஆர்யா நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் நாளை அவர் நடித்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. அடுத்தடுத்த நாளில் விஜய் சேதுபதியின் திரைப் படங்கள் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி உள்ளனர்.

இந்த நிலையில் இதேபோல் ஆர்யாவின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விஷாலுடன் ஆர்யா நடித்த ’எனிமி’ திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை திருநாளின் போது வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’அரண்மனை 3’ திரைப்படம் அதே தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் மற்றும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தமிழ் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.