close
Choose your channels

தீபாவளி ரிலீஸை உறுதி செய்த 'வலிமை' பட நடிகை!

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது என்பதும் இந்த படத்தின் நிறைவு விழா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்று வைரலாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த வைஷாலி சைதன்யா, இந்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அஜித் அவர்களுடன் இணைந்து ‘வலிமை’ படத்தில் நடித்ததில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன். அஜித் அவர்கள் மிகவும் எளிமையானவர், மிகவும் அன்பானவர், மற்றவர்களிடம் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்பவர். அவர் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தீயாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதால் வரும் தீபாவளி எனக்கு மிகவும் ஸ்பெஷல் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வலிமை’ படத்தில் நடித்த நடிகை ஒருவரே தீபாவளி ரிலீஸ் என்று கூறியுள்ளதை அடுத்து இந்த படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று கூறப்படுகிறது. நடிகை வைஷாலி சைதன்யா டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் மீண்டும் பேட்ட, விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.