close
Choose your channels

அடுத்த படம் ஆரம்பிக்கும் வரை ஒரே ரொமான்ஸ் தான்.. அட்லி-ப்ரியாவின் முத்த போட்டோஷூட்..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி இருவரும் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ’அடுத்த பட வேலையை ஆரம்பிக்கும் வரை ஒரே ரொமான்ஸ் தான்’ என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கினார் என்பதும் இதனை அடுத்து பாலிவுட் சென்ற அட்லி ரூ.1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நான் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை அவர் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது அட்லி, குடும்பத்தினருடன் முழுமையாக நாட்களை கழித்து வருகிறார் என்பதும் உள்நாடு வெளிநாடு என குழந்தையுடன் சுற்றுலா சென்று வருகிறார் என்பதையும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன் பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் அட்லியுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக இதில் பிரியாவுக்கு அட்லி முத்தம் கொடுக்கும் புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது

இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு தான் ‘அடுத்த பட வேலைகள் தொடங்கும் வரை ஒரே ரொமான்ஸ் ஆக தான் இருக்கும் போல தெரிகிறது’ என்று கமெண்ட் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.