close
Choose your channels

அட்லியின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? குரு ஷங்கரை முந்திவிட்டரா?

Monday, March 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த நிலையில் அட்லியின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அட்லி அடுத்த படத்திற்கு ரூபாய் 60 கோடி ரூபாய் சம்பளம் என்று செய்திகள் வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யா, நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, ’தெறி’ ’மெர்சல்’ மற்றும்’ பிகில்’ என விஜய் நடித்த மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதனை அடுத்து அவர் ஷாருக்கான் நடித்த 'ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்ததை அடுத்து விரைவில் ஹாலிவுட் படத்தையும் இயக்கப் போவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அட்லி அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு அட்லியின் சம்பளம் ரூ.60 கோடி என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஷங்கர் தான் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் குரு ஷங்கரை விட சிஷ்யன் அட்லி அதிகமாக சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அட்லி தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியை தொடங்கி விட்டதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.