close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த அட்லி பட ஹீரோ.. மாஸ் தகவல்..!

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்ட சில பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது அட்லி படத்தின் ஹீரோ ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தற்போது வினோத் கிஷான் என்ற நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அட்லீ தயாரிப்பில் உருவான ’அந்தகாரம்’ என்ற திரைப்படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.