close
Choose your channels

சிம்பு படம் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

Monday, August 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் சுமார் 5 படங்கள் வரை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் அதற்கு இணையான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் சிம்பு, சிபிராஜ் படங்கள் உள்பட என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை பார்ப்போம்

மஹா: ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்கள் தான் ஆகின்றது. சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படம் ஹன்சிகாவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயோன்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரையரங்குகளில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் 5ஆம் தேதி சிம்ப்ளி செளத் என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது.

விக்டிம்: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான சிம்புதேவன், எம் ராஜேஷ், வெங்கட் பிரபு மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் இணையும் நான்கு கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படம் விக்டிம். இந்த படம் வரும் 5ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் ’பக்கா கமர்சியல்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், ’கடுவா’ என்ற மலையாள படம் அமேசான் ப்ரைமிலும், ’ஜான்லூதர்’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி செளத் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment