close
Choose your channels

'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

Saturday, December 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'அவள் ஒரு தொடர்கதை' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்த நடிகை லீலாவதி காலமானார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நடிகை லீலாவதி தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தது.

தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான 'அவள் ஒரு தொடர்கதை' என்ற திரைப்படத்தில் நாயகி சுஜாதாவின் அம்மாவாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜெமினி கணேசன் உடன் 'நான் அவன் இல்லை' ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 'அவர்கள்' உட்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை லீலாவதி கடந்த சில நாட்கள் ஆக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவை அடுத்து திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment