close
Choose your channels

'பாட்ஷா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? கணவர் குழந்தையுடன் அசத்தல் புகைப்படம்..!

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா’ திரைப்படத்தில் ரகுவரனின் மகளாக அதாவது சிறு வயது நக்மா கேரக்டரில் நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா. 1987 ஆம் ஆண்டு பிறந்த இவர் 'பாட்ஷா’ படத்தில் 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சரத்குமார் நடித்த ’சூரிய வம்சம்’ விஜய் நடித்த ’ பூவே உனக்காக’ உள்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் அவர் ராதிகாவின் ’சித்தி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பல தொடர்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக ’கனா காணும் காலங்கள்’ என்ற தொடரில் ராகவி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தார்.

இந்த நிலையில் ஹேமலதா தற்போது திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து 'பாட்ஷா’ படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இவர்? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.