காலில் விழுந்து நன்றி சொன்ன எம்.சி.ஏ பட்டதாரி.. கேபிஒய் பாலாவின் நெகிழ்ச்சியான செயல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


எம்.சி.ஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கேபிஒய் பாலா உதவி செய்த நிலையில் அவர் கண்ணீருடன் நா தழுதழுக்க காலில் விழுந்து நன்றி சொன்னபோது பாலா அதிர்ச்சி அடைந்து அவருக்கு ஆறுதல் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அதன் பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.
அது மட்டும் இன்றி பாலா பலருக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் சாலை வசதி இல்லாத ஒரு சில கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார் என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி சென்னை வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு அவர் ரொக்கமாகவும் பொருளாகவும் கொடுத்து உதவி செய்தார் என்பதும் அவர் தான் சம்பாதிக்கும் பெரும்பாலான பணத்தை சமூக சேவைக்கு செலவு செய்து வருகிறார் என்பதும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி எம்சிஏ பட்டதாரி ஒருவர் தன்னிடம் மூன்று சக்கர வாகனம் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று பாலாவிடம் தெரிவித்ததை அடுத்து பாலா உடனே மூன்று சக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன் இறக்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாலா செய்த உதவியை பார்த்து ஆனந்தக்கண்ணீர் விட்டு நா தழுதழுக்க அந்த பட்டதாரி பாலாவின் காலில் விழபோனபோது அதிர்ச்சி அடைந்த பாலா அவரது கையை பிடித்து ஆறுதல் கூறியதோடு அவரது குடும்பத்தாரிடமும் நன்றி சொல்லிவிட்டு மூன்று சக்கர வாகனத்தை தனது பரிசாக கொடுத்துவிட்டு கிளம்பி சென்றார்.
இது குறித்த வீடியோவை பாலா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருவதோடு பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com