close
Choose your channels

'வணங்கான்' படத்திற்கு தயாராகிவிட்ட பிரபல நடிகர்.. படப்பிடிப்பு எப்போது?

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 'வணங்கான்’ என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் 18 வருடங்களுக்கு பிறகு பாலா மற்றும் சூர்யா இணைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்புபை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் திடீரென கடந்த ஆண்டு இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதே டைட்டிலில் சூர்யாவுக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க பாலா முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் அதர்வா உள்பட ஒரு சிலர் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவுக்கு பதில் 'வணங்கான்’ படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் டெஸ்ட் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்புக்கு அவர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் புதிய போஸ்டருடன் கூடிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.