close
Choose your channels

சூப்பர் சிங்கர் டிஜே பிளாக் விவகாரம்.. திடீரென மன்னிப்பு கேட்ட பூஜா..!

Tuesday, March 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு வித்தியாசமான சிறப்பு பாடல்களை போட்டு வந்த டிஜே பிளாக்கை அவரது அம்மா கடந்த வார நிகழ்ச்சியில் சரமாரியாக கேள்வி எழுப்பினார் என்பது அதன் பின் டிஜே பிளாக் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பிராங்க் என கூறி அனைவரையும் அதிர வைத்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு டிஜே பிளாக்கிற்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது. பூஜாவுக்காக அவர் தேர்வு செய்து வைத்திருக்கும் ஸ்பெஷல் பாடல்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த வார பிராங்க் நிகழ்ச்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள பூஜா ’இந்த பிராங்கை அனைவரும் ரசித்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். ஒருவேளை யாருக்காவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஏராளமானோர் பிராங்க்கை ரசித்ததாக கமெண்ட் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.