இந்த மாதிரி சூழ்நிலையிலும் வசூலா? வாழ்க இந்தியா: நடிகர் பாலசரவணன்

இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாளை முதல் ஒரு சில நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை முதல் அனைத்து டோல்கேட்டிலும் வாகனங்களுக்கான கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கும் வசூல் செய்வதா என சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், லாரி உரிமையாளர் சங்கம் என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் இது குறித்து பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு மே 3 வரை... ஆனால் ஏப்ரல் 20ந் தேதியிலிருந்து Toll gateல வசூல்.. இப்பொழுது காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களே அதிகம்.. இந்த மாதிரி சூழ்நிலையிலயும் அந்த வண்டிகளை நிறுத்தி காசு வாங்க நினைக்கும் எண்ணம் துரோகம்... வாழ்க இந்தியா’

நடிகர் பாலசரவணனின் இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மதுரையில் தன்னார்வலராக மாறிய பிரபல ஹீரோ: பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிந்தே.

ஒரே குடும்பத்தில் 26 பேருக்கு கொரோனா! ஏரியாவையே மடக்கிய போலீஸ்

டெல்லியின் ஜஹாங்கிர்புரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த குடும்பம் இருந்த ஏரியாவையே டெல்லி போலீசார் கட்டுப்படுத்தும்

அமெரிக்காவில் மனிதர்கள்மீது பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் தற்போதைய நிலவரம்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் &

தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு பாசிட்டிவ்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்!!! மகிழ்ச்சித்தரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகள்!!!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சையில் தற்போது புதிய திருப்பத்தைக் கண்டுள்ளதாக மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கிறது.