close
Choose your channels

எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பாலாவுக்கே ஒரு இன்ப அதிர்ச்சி.. கொடுத்தது யார் தெரியுமா?

Monday, April 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேபிஒய் பாலா பொதுமக்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது அவருக்கே ஒரு பிரபலம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சி உடன் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் எதிர்பாராமல் திடீரென உதவி செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் பாலாவுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார் என்றால் அது நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தான். சமீபத்தில் ராகவா லாரன்ஸ், பாலாவை ஹீரோ ஆக்குகிறேன், அந்த தம்பிக்கு ஏற்ற கதையை கொண்டு வாருங்கள் என இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து பாலா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’என் வாழ்நாள் கனவை எனது ரோல் மாடல் ராகவா லாரன்ஸ் அவர்கள் நிறைவேற்றி உள்ளார். இவனை ஹீரோவாக லான்ச் பண்றேன், டைரக்டர்ஸ் கதை எடுத்து வாருங்கள் என்று அவர் மேடையில் அறிவித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது என் கனவு நினைவாகும் தருணத்தை விட மேலானது. இதை வார்த்தைகளால் விளக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் இதற்கு உண்மையான இருப்பேன்.

என் தகுதிக்கும் திறமைக்கும் மேல் ஒன்றுதான் இது. மீண்டும் ஒருமுறை என் மீது நம்பிக்கை வைத்து என் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய மாஸ்டர் அவர்களுக்கு எனது நன்றி’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் ராகவா லாரன்ஸ் காலில் விழுந்து பாலா ஆசி பெறும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.