அரவிந்தசாமியின் 'பாஸ்கர் தி ராஸ்கல்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 11 2017]

நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களை பா.விஜய், விவேகா, மதன் கார்க்கி மற்றும் கருணாகரன் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சாமி, அமலாபால், நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ், பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் எந்தவொரு சமூக போராட்டத்திலும் முதல் ஆளாக கலந்து கொண்டு ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆர்யா

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறையின் காதல் மன்னனுமாகிய ஆர்யா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

ஆர்.கே.நகர் தேர்தல்: நடிகர் கவுண்டமணி எச்சரிக்கை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கம் போல் இந்த தேர்தலிலும் சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுகுழுவில் என்ன நடந்தது: விஷால் விளக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

நிவில்பாலின் முதல் தமிழ்ப்படத்தின் ஒப்பனிங் எப்படி?

பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி நடித்த முதல் நேரடி தமிழ்ப்படமான 'ரிச்சி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது