close
Choose your channels

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆர்யா

Monday, December 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரும், இளையதலைமுறையின் காதல் மன்னனுமாகிய ஆர்யா, இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz சார்பில் நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

விஷ்ணுவர்தன் இயக்கிய 'அறிந்தும் அறியாமலும்' என்ற படத்தில் அறிமுகமான நடிகர் ஆர்யா, முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து கோலிவுட் திரையுலகில் ஒரு வெற்றி நாயகனாக களம் புகுந்தார்.

ஆர்யாவுக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் விஜய் இயக்கிய 'மதராசபட்டணம்' படத்தை கூறலாம். இந்த படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதால் அவர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். சீரியஸ் படமான 'மதராசபட்டணம்' படத்தை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' என்ற காமெடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' புயலில் தப்பித்த ஒரே படம் இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாவின் 'அவன் இவன்' படத்தில் நடித்த பின்னர் ஆர்யாவின் நடிப்பில் மெருகேறியது. இதனையடுத்து ஆர்யா நடித்த 'ராஜா ராணி' அவரை காதல் மன்னனாக்கியது. மேலும் தல அஜித்துடன் இணைந்து ஆர்யா நடித்த 'ஆரம்பம்' மற்றும் மீகாமன் ஆகிய படங்கள் அவரை ஆக்சன் ஹீரோவாக்கியது.

சமீபத்தில் ஆர்யா நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ள 'சங்கமித்ரா', 'கஜினிகாந்த், அமீரின் 'சந்தனத்தேவன்' ஆகிய படங்கள் ஆர்யாவுக்கு மீண்டும் திருப்புமுனை கொடுக்கும் படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிறந்த நாளில் ஆர்யா மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.