close
Choose your channels

பூஜா ஹெக்டேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'பீஸ்ட்' நடிகை!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பூஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பூஜாவிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அபர்ணா தாஸ் தனது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் பூஜா ஹெக்டேவுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் பூஜாவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கீங்க என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.