close
Choose your channels

ராகவா லாரன்ஸின் 'துர்கா' படத்தில் இருந்து விலகிய 'பீஸ்ட்' பிரபலங்கள்!

Sunday, March 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ‘துர்கா’ என்ற படத்திலிருந்து திடீரென விலகி உள்ளதாக ‘பீஸ்ட்’ பட பிரபலங்கள் அறிவித்துள்ளனர்.

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படம் ‘துர்கா’ . இந்த படத்தின் இயக்குனர்களான அன்பு மற்றும் அறிவு என்ற அன்பறிவ் இரட்டையர்கள் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டனர் .

இந்த நிலையில் தற்போது ‘துர்கா’ படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அன்பறிவ் அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிய ஒப்புக்கொண்டுள்ள படங்களின் கமிட்மெண்ட்ஸ் அதிகம் இருப்பதால் ‘துர்கா’ படத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்றும் இதனால் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாகவும், அதனை பெரும் மனதுடன் ஏற்றுக் கொண்டு எங்களை இயக்குனர் பொறுப்பில் இருந்து ராகவா லாரன்ஸ் விடுவித்துள்ளார் என்றும் அவருக்கு தங்களது நன்றிகள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’, கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’, யாஷ் நடித்துவரும் ’கேஜிஎப் 2’ உள்பட முக்கிய பிரபலங்களின் படத்தில் ஸ்டண்ட் இயக்குனரகளாக அன்பறிவ் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பணியில் இருந்து விலகினாலும் ‘துர்கா’ படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.